சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். நகைச்சுவை நிறைந்த கதை. புலியால் தனக்கு மரணம் என்று ஜங் ஜங் பஹதூர் அறிகிறார். 100 புலியை கொன்றால் தான் மற்ற பரிகாரம் என்று ஜோசியர் கூற, பத்து வருஷங்களில் 70 புலிவேட்டை, பிரிட்டிஷாரிடம் , மனைவி சமஸ்தானம் மூலம் 29 புலிவேட்டை என்று இருக்கும் மன்னரின் கதை என்ன ஆகிறது? கேளுங்கள் புலி ராஜா
(Tags : Puli Raja Kalki Audiobook, Kalki Audio CD )